பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாக்கிழந்தார் "தர்மப் பிரவுவே! சாப்பிட்டு நாலு நாட்களிகின் றன; கண் பஞ்சடைந்திருக்கிறது, கைகால்கள் துவண்டு போகன் றன. காது அடைத்துக்கொண்டு போகிறது, மயக்கமாக இருக்கிறது, ஒரு கவளம் கிடைத்தால் உயிர் சிற்கும்." பஞ்சையின் இப்பரிதாபக் குரலைக் கேட்க, அந்தத் தர்மப் பிரபுவுக்கு நேரம் உண்டா?. அவருக்கு எவ்வளவோ தொல்லை, எத்தனையோ அவசரமான ஜோலி. இந்தப் பிச் சைக் கிண்ணி, குறுக்கே நின்றால் அவர் தமது காரியத்தைக் கவனிக்காது இவனுக்கு உபசாரம் செய்யவா, தங்குவார்! அதோ பாருங்கள். அவர், எவ்வளவு கவலையுடன் காரில் உட்காருகிறார். கதவை இழுத்து அடிக்கிறாரே கேட்கிறதா சத்தம்! அவ்வளவு கோபம் அவருக்கு. எங்கே செல்கிறார் தெரியுமா! ஒரு பெரிய நஷ்டம் நேரிட்டுவிட்டது அவருக்கு. அதற்காகவே அவசரமாக ஓடுகிறார். பதினைந்து ஏகரா நிலமும், பழைய வீடுமாகச் சேர்த்து இவரிடம் கடன்பட்ட

  • சோணகிரி, கடன் தொகை (வட்டி அசல்) ஐந்தாயிரத்

துக்கு, விக்ரயப் பத்திரம் எழுதிக் கொடுத்து விடுவதாகச் சொன்னான்; சரி என்றார். ஏகர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்