பக்கம்:சேக்கிழார்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38சேக்கிழார்


அவன் திருவாரூர்க் கோவிலில் உள்ள தேவார ஆசிரியர் உருவச் சிலைகளுக்குப் பல ஆடை அணிகளும் பூசைக்குரிய பொருள் வசதியும் அளித்தான்; சுந்தரர், அவர் தகப்பனாரான சடையனார், தாயாரான இசைஞானியார் உருவச் சிலை களைத் திருவாரூர்க் கோவிலில் எழுந்தருளச் செய்தான். அப் பக்திமான் தன் பெயரால் பல கிராமங்களையும் நிலங்களையும் பல பெரிய கோவில்கட்குத் தானமாக அளித்தான்.

அமைதியான அரசியல்

அநபாயன் காலத்தில் பிற நாட்டு அரசர் படையெழுச்சி இல்லை; உள் நாட்டில் குழப்பம் இல்லை. சோழப் பெருநாடு கிருஷ்ணை முதல் கன்னியாகுமரி வரை பரவி இருந்தது. நாடு நல்ல நிலையில் இருந்தது. அரசாட்சி அமைதியாக நடைபெற்று வந்தது. அதனால் அநபாயன் தமிழ் நூல்களைப் படிப்பதிலும் கேட்பதிலும், சைவத் திருப்பணிகளிலும் தன் காலத்தை இன்பமாகக் கழித்து வந்தான்.


7. சேக்கிழார்-முதல் அமைச்சர்

அநபாயன் அரச சபை

அநபாயச் சோழன் சிறந்த தமிழ்ப் புலவன் என்று முன் சொன்னோம் அல்லவா?. அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/40&oldid=492384" இலிருந்து மீள்விக்கப்பட்டது