பக்கம்:சேக்கிழார்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் மா. இராசமாணிக்கனார் 47


நாகேசுவரத்தை எப்பொழுதுமே தரிசிக்க இயலாது அல்லவா? தமது ஊரில் அத்தகைய கோவில் இருந்தால் தமது ஓய்வுக் காலத்தில் அதனைத் தரிசித்துக் கொண்டு இருக்கலாம் என்று அவர் எண்ணினார். அதனால் அப் பெரியார் குன்றத்தூரில் இன்று நாம் காணும் ‘திருநாகேசுவரம்’ என்னும் சிவன் கோவிலைக் கட்டினார் ; அதில் பூசை, விழா முதலியன குறைவற நடக்கப் பல நிலங்களை மானியமாக விட்டார். சேக்கிழார் அக் கோவிலைக் கட்டினார் என்பதற்கு அடையாளமாக, அக் கோவிலில் அவருக்குத் தனிக் கோவில் எழுப்பப்பட்டு இருக்கிறது; ஆண்டு தோறும் அவருக்குச் சிறப்பான முறையில் திருவிழாச் செய்யப்படுகிறது.

சேக்கிழார் யாத்திரை

பெரு நாட்டின் முதல் அமைச்சர் தமது பெரு நாட்டைச் சுற்றிப் பார்க்க வேண்டும் அல்லவா ? இக்காலத்தில் நமது மாநில அமைச்சர்கள் நமது மாநிலம் முழுவதையும் சுற்றிப் பார்க்கிறார்கள் அல்லவா? சுற்றிப் பார்த்து, நாட்டு நிலவரங்களை அறிந்து, அவற்றிற்குத் தக்கபடி அரசியல் நடவடிக் கைகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஆதலால் எல்லா அமைச்சர்களும் தம் ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை நன்றாகப் பார்வையிடுதல் கடமை யாகும். அவர்கள் கிராமந்தோறும் செல்வார்கள்; விளைச்சல், நீர்ப் பாசனம், கிராம ஆட்சி முறை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/49&oldid=491961" இலிருந்து மீள்விக்கப்பட்டது