பக்கம்:சேக்கிழார்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் மா. இராசமாணிக்கனார் 57


உடனே கட்டியங்காரனைக் கொல்லப் புறப் பட்டான். முனிவர், “அவனைக் கொல்லக் காலம் வரும்; அவசரப்படாதே” என்று அடக்கினார்.

சீவகன் வீரச் செயல்களும் மண நிகழ்ச்சிகளும்

கோவிந்தை-திருமணம்

தலை நகரத்தில் நந்தகோன் என்பவன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பசுக் கூட்டங்கள் செர்ந்தம். அவற்றைப் பக்கத்து மலை நாட்டு வேடுவர் கைப்பற்றிக் கொண்டனர்: கட்டியங் காரன் படைகள் சென்றும் அவற்றை மீட்க முடிய வில்லை. நந்தகோன் வருந்தி, "என் பசுக் கூட்டங்களை மீட்கும் வீரன் என் தவ மகளான கோவிந்தையை மணந்து கொள்வானாக!” என்று: பறை சாற்றினான். சீவகன் தன் தோழர்களுடன் சென்றான்; வேடுவரைத் தன் வில் வலியாலும் வாள் வலியாலும் புறங்கண்டான்; பசுக் கூட்டங் களை மீட்டுக் கொண்டு வந்தான்; அனைவரும் வாழ்த்துக் கூறக் கோவிந்தையை மணந்து கொண்டான்.

காந்தர்வதத்தை

இவள் ஓர் அரசன் மகள். இவள் சீவகன் இருந்த தலை நகரத்திற்குக் கொண்டு வரப் பட்டாள். ‘இவளை யாழில் வெல்பவன் மணப்பானாக!’ என்று பறையறைவிக்கப்பட்டது. சீவகன் எல்லா இசைக் கருவிகளையும் மீட்டுவதில் புகழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/59&oldid=491974" இலிருந்து மீள்விக்கப்பட்டது