பக்கம்:சேக்கிழார்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் மா. இராசமாணிக்கனார் 59


டத்தில் மல்லிகை, முல்லை, இருவாட்சி, ரோஜா, முதலிய மலர்கள் விரிந்து நறுமணத்தை நாற்புறமும் பரப்பின. மெல்லிய காற்று அங்கு வீச, மலர்கள் அசைந்தாடின. அக் காட்சி அமைச்சரையும் இளவரசனையும் வரவேற்கும் காட்சி போலக் காணப்பட்டது.

உரையாடல்

இளவரசன் : புலவர் பெருமானே, சீவகன் வரலாறு படிக்கவும் கேட்கவும் இன்பமாகவே இருக்கின்றது. அரசர் தினந்தோறும் அந் நூலினைத் தனியாகப் படித்தும் இன்பப் படுகிறார். நானும் சில பகுதிகளைப் படித்துப் பார்த்தேன். இன்பமாகத்தான் இருக்கிறது.

சேக்கிழார் : இளவரசரே, அந்நூல் படிக்கப் படிக்க இன்பம் தரும்; கதாநாயகனான சீவகன் வீரச் செயல்களும் பல கலைகளில் அவன் காட்டிய திறமையும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். அந்த நூலினை நான் முழுவதும் வாசித்தவன். செய்யுட்கள் அழகானவை. அக் காவியத்தைப் பாடிய திருத்தக்க தேவர் சிறந்த புலவர் என்பது அக் காவியத்திலிருந்து புலப்படுகிறது. ஆனால்...

இளவரசன் : ‘ஆனால்’ என்ன? உங்கள் கருத்தைத் தெளிவாக்த் தெரிவியுங்கள். ‘ஆனால்’ என்னும் சொல், அந்நூலில் குறையுண்டு என்பதைக் குறிப்பாக உணர்த்துவது போலக் காண்கிறதே. அன்பு கூர்ந்து உங்கள் எண்ணத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/61&oldid=491976" இலிருந்து மீள்விக்கப்பட்டது