பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சேக்கிழார் தந்த செல்வம் துயரைத் தானும் பங்கிட்டு அனுபவிப் பதாக முடியும். இந்தக் குறளுக்குச் சேக்கிழார் பெருமான் கண்ட உரையாகும் இது: பிறிதின் நோய் போக்க முடியாததாயின், அத்தகைய போக்க முடியாத நோயைத் தானும் வரவழைத்துக் கொண்டு அனுபவிக்க வேண்டும். எனவே, சேக்கிழாரின் மனுநீதி இதோ பேசுகிறான்: எனமொழிந்து "மற்றிதனுக்கு இனிஇதுவே செயல்; இவ்ஆன் மனம்அழியும் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும்இது தனதுஉறு பேர்இடர் யானும் தாங்குவதே தருமம்' என அனகன் அரும்பொருள் துணிந்தான் (பெ. பு-127) மன்னனின் தருக்க முறை அச்சத்தை விளைவிப்ப தாகும். ஆனால், மிக எளிய முறையில் நியாயத்தை எடுத்துக் கூறுகிறான். கன்றை இழந்த தாய்ப் பசுவின் நிலையை மன்னன் எவ்வாறு பெற முடியும்? மகனை இழப்பதன்மூலமே பெற முடியும். இத்தகைய நினைத்தற்கரிய முடிவுக்கு அத்தமில் மன்னன் விரைவில் வந்துவிட்டான். அடுத்துத் தான் கண்ட முடிவை இதோ செயல்படுத்துகிறான். அதனை,