பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனுநீதி என்னும் வழிகாட்டி 99 சட்டங்கள், வடநாட்டைப் பொறுத்தவரை பொருத்த முடையனவே தவிர, தமிழ்நாட்டார் அதனை ஏற்றுக் கொள்ளவில்ல்ை என்பதை அறிவுறுத்தற்கு, இக் கதையைப் பயன்படுத்துகிறார். இவ்வாறு கொள்வது சரியா என்று யாரேனும் நினைத்தால், அது சரியே’ என்பதற்கு ஒரு மேற்கோளையும் எடுத்துக்காட்ட முடியும். ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் (656) என்ற குறளுக்கு உரை வகுத்த பரிமேலழகர், இறந்த மூப்பினராய இருமுதுகுரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண், தீயன பலவும் செய்தாயினும் புறந்தருக என்னும் அறநூற் பொதுவிதி. அமைச்சர்க்கு எய்தாமை பற்றி இவ்வாறு கூறினார்’ என்று கூறுவதால் மேலே கூறிய கருத்து வலியுறும், சோழ சாம்ராச்சியத்தை நிறுவிய இராசராசன், இராசேந்திரன் முதலியோர் தமிழகத்தில் பிறந்த தமிழராயினும், வடநாட்டில் பிறந்த கோளகி மடத்தைச் சேர்ந்த சதுரானன பண்டிதர் போன்றவர்களையே குருவாகக் கொண்டு இருந்தனர் என்பதைக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. குருமார்கள் வடவராதலின், அவர்கள் புகட்டிய நீதியும், மனுஸ்மிருதியை அடியொற்றியே இருந் திருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த வடவரின் ஆதிக்கத்தால், தேவாரப் பதிகம். பாடுபவர்க்குக்கூட வடவர் முறையில் தீட்சை செய்வித்தே ஒதுவார் களாகப் பணிபுரிய ஆணையிட்டான் இராசராசன். தேவாரப் பதிகம் பாடுவோர் பெயர்ப் பட்டியலைத்