பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 சேக்கிழார் தந்த செல்வம் SAASAASAAASதங்கள் அரசு இளங்குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார். (பெ. பு-15). என்று பாடுவதால், நம்பி ஆரூரர் வாழ்க்கை, தொடங்கும்பொழுதே ஒரு புரட்சியைத் தொடங்கு கிறது என்பதை அறியமுடிகிறது. சிவ வேதியர் குலத்திற்கு ஏற்ற பழக்க வழக்கங்களையும், நம்பி ஆரூரர் திருமணக்காலம்வரை விடவில்லை என்று தெரிகிறது. திருமணப் பருவம் வந்தவுடன் சடங்கவி சிவாச்சாரியார் என்பவரின் மகளை, நம்பி ஆரூரருக்கு மணம் முடிக்க முடிவு செய்து, அதன்படியே திருமணப் பந்தலில் அனைவரும் கூடினர். வேதியர்கள் நிறைந்த அந்தக் கூட்டத்தில், திருமணச் சடங்கு தொடங்குகின்ற அந்த வேளையில், ஒரு கிழட்டு அந்தணன் உள்ளே நுழைந்தான். மன்னவர் திருவும், வைதிகத் திருவும் நிறைந்துள்ள மணப்பந்தலில், "பண்டிசரி கோவண உடைப்பழமை கூரக் கொண்டதுஓர் சழங்கல்உடை ஆர்ந்து அழகு கொள்ள வெண்துகிலுடன் குசை முடிந்துவிடு வேணுத் தண்டு ஒருகை கொண்டுகழல் தள்ளு நடைகொள்ள' - (பெ. பு-177)