பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் 117 இன்றைய சமுதாய இளைஞர்கட்கு சேக்கிழார் உணர்த்தும் பாடமும் சேக்கிழார் தந்த செல்வத்தின் இரண்டாவது பகுதியாகும். மேலும் ஒரு செல்வம் திருநாவுக்கரசர் கைத்தொண்டு செய்த பதியை, காலால் மிதிப்பது தவறு என்ற எண்ணம் நம்பி ஆரூரருக்கு எப்படி வந்தது . அடுத்தபடியாகத் திருஞானசம்பந்தப் பெருமான் அவதாரம் செய்த சீர்காழிப் பதியையும் காலால் மிதிப்பது சரியில்லை என்று ஊரைச் சுற்றிக்கொண்டு போனார் சுந்தரர். இதனைக் கூறவந்த சேக்கிழார், பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி, உள்ளும் நான் மிதியேன்” (பெ.பு.258) என்று ஊர் எல்லைப் புறம் வலம்வந்து போனார் என்று கூறுகிறார். இந்த எண்ணம் சுந்தரருக்கு எவ்வாறு வந்தது? இதற்குக் காரணமாக இருந்தவர் காழிப்பிள்ளையாரே ஆவார். இனி, இவரால் போற்றப்பெறும் திருஞானசம்பந்தர் என்ன செய்தார்? பல தலங்களையும் வணங்கி வரும் 'தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தர்' திருவாலங்காட்டுக்கு வருகிறார். அப் பெருமானுக்கு மூன்று நூற்றாண்டுகள் முற்பட்டு இறைவனாலேயே 'அம்மையே என்று அழைக்கப்பெற்ற காரைக்கால் அம்மையார் பேய் வடிவுடன் கயிலையிலிருந்து தலையால் நடந்து, ஆலங்காட்டு ஐயனிடம் வந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. தம் தந்தையாகிய