பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சேக்கிழார் தந்த செல்வம் நின்றுவிட்டதால் ஏனைய கரணங்கள் செயலிழந்து விட்டன. அந்தக்கரணங்கள் நான்கும் பொறிகளுடன் மாறுபட்ட பல்வேறு துறைகளில் ஈடுபடுவதற்கு மூலமாக இருப்பவை முக்குணங்களாகும். தாமசம், இராஜசம் என்ற இரு குணங்களின் வழிப்பட்ட பொறிகள், மனம், சித்தம் என்பவற்றோடு ஒருங்கிணையாமல் ஒன்றுக்கொன்று மாறுபட்ட தொழிலில் ஈடுபடுகின்றன. மூன்றாவதாக உள்ள சாத்துவிக குணத்தில் இவை லயிக்கும் பொழுது, மேலே கண்ட பொறிகள், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்றுவிட்டன. வேறு வகையாகக் கூறவேண்டுமானால், நம்பி ஆரூரரும் முதன்முதலில் கண்கள் என்ற பொறி வழியாகத்தான் கூத்தன் திருநடனத்தைக் காணத் தொடங்கினார். ஒரு வினாடியில் திடீரென்று ஒர் அதிசயம் நடந்துவிட்டது. பல்வேறு இடங்களில் சிதறிக் கிடக்கும் இரும்புத் துகள்கள், வலுவான காந்தம் எதிர்பட்டபோது ஓடிவந்து ஒரே நேர்க்கோட்டில் அந்தக் காந்தத்தின் எதிரே நின்று விடுவதைப் போல, இங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்தது. ஆரூரரின் பொறிகள், அந்தக்கரணங்கள், முக் குணங்கள் ஆகிய இரும்புத் துகள்கள் கூத்தப் பெருமானின் திருக்கடைக்கண் பார்வையாகிய காந்தம் பட்ட அதே வினாடியில், இவை அனைத்தும் ஒன்றாக இணைந்து, அவனருளில் மூழ்கத் தொடங்கி