பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162. சேக்கிழார் தந்த செல்வம் இன்று பெரியபுராணத்தைக் கற்கின்ற சைவர்கள், தமிழ்நாட்டுச் சமணர்கள் ஆகிய இருவரும் வரலாற்றடிப்படை தெரியாமையால், பெருந்தவறு செய்கின்றனர். 6ஆம் நூற்றாண்டில் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்தவர் நாவரசர். "கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார்’ (1807) என்று நாவரசர் சமணரானதைச் சேக்கிழார் பாடுவதை, வரலாற்றுக் கண்கொண்டு &ᏚFTöᏈᏈT வேண்டும். சங்க காலம்தொட்டே, தமிழ் மக்களில் சிலர் சமண சமயத்தைப் பின்பற்றிவந்தனர். ரிஷப தேவரும் ஏனைய தீர்த்தங்கரர்களும் வடபுலத்தைச் சேர்ந்தவர்களாயினும் அவர்கள் வகுத்த சமயத்தின் அடிப்படையான கொள்கை, பிறர்மாட்டு அன்பு, பிற உயிர்களுக்குக் கருணை, அஹிம்சை, நோன்புகள் முதலியனவாகும். இக் கொள்கைகளில் சைவர்கள் ஒதுக்கக்கூடியவை, தங்களுக்குப் புறம்பு என்று கூறக்கூடியவை எதுவும் இல்லை. எனவே, சங்க காலம்தொட்டு, இன்றுவரை இங்குள்ள சமணர்கள் ஏனைய மக்களோடு ஒருங்கிணைந்து, அமைதியாக வாழ்ந்துவருகிறார்கள். இவர்களில் பலர் மாபெரும் தமிழறிஞர்களாக, தமிழ்ப் பற்றுடையவர்களாக, தமிழ் மொழியைத் தாயெனப் போற்றுபவர்களாக, பல தமிழ் நூல்களை இயற்றியவர்களாக இருந்தனர். பெருங்கதை GTGÖT வழங்கும் உதயணன் சரிதையும், திருத்தக்கதேவர் இயற்றிய சீவக சிந்தாமணியும், தோலாமொழித் தேவரின் சூளா