பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168. சேக்கிழார் தந்த செல்வம் இருந்தது. எனவே, சமணர் என்ற போர்வையில் இருந்த களப்பிரர்களை நம்பி ஏமாந்தனர் என்றே அறிய வேண்டும். கையூட்டு இக்காலத்தில் இந்தியப் பெருநாட்டை ஆட்டிப் படைக்கும் கையூட்டு முறை (லஞ்சம்) தமிழகத்திற்குப் புதியதன்று என்பதை மகேந்திரவர்மன் எழுதிய மத்த விலாசப் பிரகசனம் என்ற நாடகத்தில் காணலாம். அந்த நாடகத்தை நன்கு படித்த சேக்கிழார், தக்க இடத்தில் அதனைப் பயன்படுத்துகிறார். நாவரசர் சைவத்திற்கு மீண்டுவிட்டார் என்பதை அறிந்த களப்பிரர்கள் காடு, மலைகளில் இருந்த தம் இருக்கையை விட்டு, மகேந்திரவர்மனிடம் வந்து 'உன்னுடைய ஆணையை மீறிய மருள்நீக்கியாரைக் கொண்டுவந்து தண்டிக்க வேண்டும் என்று கோள் மூட்டுகின்றனர். பல்லவன் தலைநகரில் இல்லாமல் எங்கோ காட்டிலும் மலையிலும் வாழ்ந்த இவர்கள் இப்பொழுது அரசனிடம் வந்து கூடினார்கள் என்பதை, தலையும் பீலியும் தாழவந்து ஒரு சிறை சார்ந்தார் (35) என்று கவிஞர் கூறுவதால் எங்கோ வாழ்ந்தவர்கள் இப்பொழுது அரசனிடம் ஒரு சேரக் கூடினார்கள் என்று அறிகிறோம். மகேந்திரன் காலத்தில் தமிழ்ச் சமணர்கள் காஞ்சியில் நிரம்ப வாழ்ந்துவந்தனர். எனவே, வந்து ஒரு சிறை சார்ந்தார் என்று இவர்களைப்பற்றிச் சேக்கிழார்