பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் 11 கும்பகர்ணன், இந்திரசித்தன் ஆகியோர் ஒரு புறம், குரங்குப் படைகளையல்லாமல் வேறு எவ்வித பலமும் இல்லாத இராம, இலக்குவர்கள் மறுபுறம். அத்துணைப் பலம் இருந்தும், இராவணனிடம் அறம் இல்லை. எவ்விதப் படைபலமும் இல்லாவிட்டாலும் இராமனிடம் அறம் நிலைத்து நின்றது. இந்தப் பெரிய தத்துவத்தை விளக்கிக் காட்டவே கம்பநாடன் தன் காப்பியத்தின் grf பாதியை யுத்த காண்டத்திற்கு வழங்கிவிடுகிறான். சோழப் பேரரசின் தொடக்கத்தில் தோன்றிய கம்பநாடன் காப்பியம் தோன்றிய காலம் அக்காப்பியத்தின் குறிக்கோள் என்ன என்பதை இப்பொழுது அறிந்து கொண்டோம். பெரியபுராணம் தோன்றக் காரணம் 12ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இரண்டாாம் குலோத்துங்கன் ஆட்சி நடைபெறுகிறது. தெற்கு பீஹார்முதல் கன்னியாகுமரிவரை - இன்றுள்ள ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய எல்லாப் பகுதிகளும்-குலோத்துங்கன் ஆட்சியின்கீழ் இருந்தன. இப்படிப்பட்ட வலுவான ஆட்சியில் அந்தக் குலோத்துங்கனின் தலைமை அமைச்சராக இருந்தவர் தான் குன்றத்துரில் பிறந்த சேக்கிழார். திறனாய் வாளர் கூற்றுப்படி சாம்ராச்சியத்தின் உச்ச கட்டத்தில் எப்படிக் காப்பியம் தோன்றிற்று என்ற வினா எழலாம். உண்மை என்னவென்றால், சோழப்