பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சேக்கிழார் தந்த செல்வம் இரண்டாவது பாடல் தனிச் சிறப்புடையதாகும். மிக இளம் பிராயத்தினராகிய ஆளுடைய பிள்ளையார் அந்த வயதில் பழுத்த சிவனடியார் யாரையும் கண்டதில்லை என்றாலும், தம் மனத்தோடு ஓர் ஒவியத்தை வரைந்துவைத்திருந்தார். அந்த ஒவியத்தை ஒத்த அடியாரைப் பிள்ளையார் இது வரை கண்டதில்லை. இப்பொழுது ஆளுடைய அரசைக் கண்டவுடன், ஆளுடைய பிள்ளையார் மனத்தில் தோன்றிய எண்ணம் என்ன தெரியுமா? அவருடைய கற்பனையில் ஒரு பழுத்த சிவனடியார் இப்படித்தான் இருப்பார் என்ற ஒவியம் இருந்ததல்லவா? அந்த ஓவியம் இப்பொழுது உயிர் பெற்றுத் தம் எதிரே திருமேனி தன்னில் அசைவோடு’ வருவதைப் பிள்ளையார் கண்டு பேருவகையில் மூழ்கினார். இதனைக் கூறவந்த சேக்கிழார் கருத்தில் பரவு மெய்க் காதல் தொண்டர் திருவேடம் நேரே தோன்றியது என்று கூறுகிறார். ஆளுடைய அரசை ஆளுடைய பிள்ளையார் கண்ட காலத்தில்தான் இத்தகைய வடிவுடன் இருந்தார் என்று நினைக்கவேண்டியதில்லை. நாவரசர் வேடம் எப்பொழுதும் இப்படியேதான் இருந்தது. இதனை அறிய மற்றோர் நிகழ்ச்சி அப்பூதி அடிகள் புராணத்தில் பேசப்படுகிறது. இதனைப் பின்னர்க் காண்போம். " . . . . ."