பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 சேக்கிழார் தந்த செல்வம் விதத்தை விருப்பு வெறுப்புக்களைக் கடந்து நிற்கும் அம்மையாரின் மனநிலையை எடுத்துக் காட்டி விட்டார். பாடலின் முதலடியில் மைந்தா! என்ற ஒரு சொல்லின்மூலம் திருவெண்காட்டு நங்கை யையும் எடை போட்டுக் காட்டுகிறார் சேக்கிழார். அகங்கார, மமகாரங்கள் முற்றிலும் நீங்காத சிறுத் தொண்டர் அழைத்தபொழுது மைந்தன் வரவில்லை. விருப்பு வெறுப்புக்களைக் கடந்து அடியார் இட்ட கட்டளையை நிறைவேற்றுவது ஒன்றுதான் தம் கடமை என்ற கருத்துடன் அம்மையார் அழைத்த உடன் பள்ளியினின்று வருபவனைப் போல மைந்தன் ஓடி வந்தான் என்கிறார் சேக்கிழார், இறைவன் ஏற்பது எப்போது? இப்பெரிய வரலாற்றின் மூலம், மனித சமுதாயத்திற்குச் சேக்கிழார் கற்பிக்கும் பாடம் ஒன்று உண்டு. புறத்தே நிகழும் நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு ஒருவரை மாபெரும் தியாகி என்று நினைப்பது அவ்வளவு சரியானதன்று. அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்காமல் எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய முன்வந்தாலும் இறைவன் அதை ஏற்றுக்கொள்வதுபோலக் காட்டி, அந்த அகங்காரத்தைப் போக்கவே முனைகின்றான் என்ற பாடம் இற்றை நாள் சமுதாயத்திற்கும் தேவையானது ஆகும். 3 @ö@@