பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 சேக்கிழார் தந்த செல்வம் அகங்கார, மமகாரங்களின் அடிப்படையில் தோன்றும் தன்னல உணர்வுகள் மனத்திடை இருத்தலின் அம்மனம் விரிவடையாமல் சுருண்டு விடுகிறது. இம் மனம் சுருள் நீங்கி முகிழ்க்க வேண்டுமேயானால் تواناییه இரண்டு வகையில் பெறப்படும். ஒரு வகை, உவமையிலா கலை ஞானத்தைப் பெற்று மனம் விரிவடைதலாகும். இந்த நிலையில் ஒன்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். கலைஞானம் பெற்றவர்கள் எல்லாம் மனச்சுருள் நீக்கி மனவிரிவடைந்து விட்டார்கள் என்று கூற முடியாது. இப்படிப்பட்டவர்களிடத்தில் கலை தான் செய்ய வேண்டிய பணியைச் செய்யவில்லை என்று தான் கூறவேண்டும். இதனைத் தான் வான்மறை தந்த பேராசான், கற்றதனால் ஆய பயன் என்கொல்’ என்று கூறுகிறார். கலையின் உண்மையான பயன் மனச்சுருள் நீக்க வேண்டும். இவ்வாறு கூறுவதால் கலையின் பயன் என்ன என்பதை தெய்வச் சேக்கிழார் நன்கு வலியுறுத்துகிறார். நாவுக்கரசரை பொறுத்தவரை பல்லாண்டுகள் அறிதின் முயன்று, பலகலைகளையும் கற்று, மனம் விரிவடையாமல் பல காலம் கழித்து பின்னர் அவ்விரிவைப் பெற்றார். அவ்வாறு பெற்ற நிலையில் தான், ஒதிய ஞானமும் ஞானப் பொருளும் ஒலி சிறந்த வேதியர் வேதமும் வேள்வியும் ஆவனட . * : * * (திருமுறை: 4-93-17) என்று பாட முடிந்தது.