பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 சேக்கிழார் தந்த செல்வம் இல்லையானால் அவர் கொண்டிருந்த நீலகண்ட பக்தி அவருக்கும் இறைவனுக்கும்மட்டும் தெரிந்ததாய் அம்மட்டோடு நின்று மறைந்திருக்கும். அந்த அளவு எத்தகையது என்பதை வேதித்து (வேறுபடுத்திக் காட்டுவதற்காகத் தோன்றிய ஆணை, என்று கூறுவதால், இந்த ஆணையின் ஆற்றல் எத்தகையது, ஆணையைக் கேட்டு அஞ்சி அகன்றவர் எத்தகையவர் என்பதையெல்லாம் காட்டுதலின், பேதியா ஆணை’ - வேறுபடுத்திக் காட்டுகின்ற ஆணை என்ற பரந்த பொருளில் இச்சொல்லைப் பயன்படுத்துகிறார். என்னை-எம்மை சேக்கிழார் கூற்றை - ஒரு வினாடியில் மறந்து விட்டு, நடந்தவற்றைமட்டும் கற்பனையில் கொண்டு. பார்த்தால், சிலவற்றை விளங்கிக்கொள்ள முடியும் எவ்வளவு முயன்றும் சிலவற்றை ஏன் என்று விளங்கிக் கொள்ள முடியாது. நடைபெற்றது உலகியலில் எல்லா இடங்களிலும் அன்றாடம் நடைபெறுகின்ற நிகழ்ச்சித்ான். மேட்டுக் குடியில் பிறந்த ஒர் இளைஞன், பரத்தையிடம் செல்வது, மனைவியிடம் குறை இரந்து மன்னிக்கு மாறு வேண்டுவது, வாழ்க்கையில் அன்றாடம் நிகழும் ஒன்றாகும். அப்படி என்றால், திருநீலகண்டர் வாழ்க்கையில் நிகழ்ந்த இந்தச் சாதாரணச்