பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை துறந்தார் 335 கழிந்தமையின் அந்தக் கிழவனை இன்னான் என்று கூடப் புரிந்துகொள்ளவில்லை. வந்தவன் பேச்சைத் தொடங்கும்பொழுதே ஆத்திர மூட்டும் வகையில் பேசுகிறான். "முந்தைநாள் உன்பால் வைத்த மொய் ஒளி விளங்கும் ஒடு தந்துநில்' என்றான் 争势 (பெ. பு-379) ஒரு பொருளைக் கொடுத்துவிட்டு, பின்னர்க் கேட்பவர்கள்கூடப் பல முறை கேட்டும் தரா விட்டால் கடைசியாக, இதைக் கொடுத்துவிட்டு மறுவேலை பார் என்று பேசுவது இன்றும் உலக மரபு தான். அப்படி இருக்க, தான் இன்னான் என்பதையே அடையாளம் கண்டுகொள்ள முடியாத வேட்கோவ ரிடம் தந்து நில் அதாவது கொடுத்து விட்டு மறுவேலை பார் என்று பேசுவது, பக்கத்தில் நிற்பவர் யாராக இருப்பினும் அவருடைய ஆத்திரத்தை வெளிக்கொணரும் என்பதில் ஐயமில்லை. இந்த உரையாடல் நடைபெறும் பொழுது, தாம் பாதுகாவலுடன் வைத்த ஒடு மறைந்து போன செய்தி வேட்கோவருக்குத் தெரியவே தெரியாது. அப்படி இருந்தும், கிழவன் தந்துநில் என்று