பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 சேக்கிழார் தந்த செல்வம் தில்லைக்குச் சென்றால் தம் குலம் காரணமாக நடராஜப் பெருமானைக் காண முடியாதென்ற கருத்தினால் நாளைச் செல்லலாம்’ நாளைச் செல்லலாம் என்று கூறிக்கொண்டிருந்து இறுதியாக ஒரு நாள் தில்லைக்குச் சென்றேவிட்டார். ஆனால், அங்கும் தம் சாதி காரணமாக அம்பலத்துள் செல்ல விரும்பாமல், புறத்தே இருந்து பெருமானை மனத்தால் நினைத்து வணங்கித் தம் பிறப்பைப் பற்றியே நினைந்து வருந்தித் துயிலச் சென்றார். இறைவன் அவருடைய கனவில் தோன்றி, இப்பிறவி போய்நீங்க எரியினிடை நீ மூழ்கி நம் கோயிலினுள் வருக எனப் பணித்து, அங்ங்னமே தில்லைவாழ் அந்தணர்கட்கும் நந்தனுக்கு எரி அமைத்துத் தரப் பணித்து மறைந்தார். மறுநாள் அவர்கள் அப்படியே தீ அமைத்துத் தரத் திருநாளைப் போவார் அதில் மூழ்கி எழுந்து கோயிலுட் சென்று இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இதுவே சேக்கிழார் கூறும் நாளைப் போவார்சரித்திரமாகும். பிறப்புப் பற்றிச் சேக்கிழார் குறிப்பு பிறந்து உணர்வு தொடங்கிய காலத்திலிருந்தே இறைவன் மாட்டுப் பெரும் காதல் கொண்டு, மறந்தும் அயல் நினைவின்றி இருந்தார் என்று சேக்கிழார் பெருமான் பாடிச் : செல்கிறார்.