பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 சேக்கிழார் தந்த செல்வம் உறுகுலத்தோடு இசைவில்லை - . (பெ. பு-066) என்று பேசுவது கொஞ்சம் வியப்பை அளிக்கின்றது. இதுவரையில் எவ்வாறாயினும் இறைவனை வணங்க வேண்டுமென்று நினைத்தாரே தவிர அங்ங்னம் வணங்குவதற்குத் தம்முடைய இந்தப் பிறவி தடை. என்ற எண்ணம் இவ்வளவு பெரிதாக அவர் மனத்தில் தோன்றவில்லை. ஆனால் தில்லைக்குச் செல்லவேண்டும் என்று நினைத்தவுடனேயே "குலத்தோடு இசைவில்லை” என்ற எண்ணம் பெரிதாகிவிட்டது. சாதாரணமாக மனத்திலே தோன்றும் பல்வேறு எண்ணங்கள், கவலைகள் போல் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நினைப்பது தவறு. ஒவ்வொரு முறை தில்லை செல்லவேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன் அடுத்து அவருடைய மனத்தில் தோன்றியது தம்முடைய குலம்பற்றிய நினைவுதான். எவ்வளவு ஆழமாக இக்குலம்பற்றிய எண்ணம் நந்தனாருடைய மனத்தில் தோய்ந்து விட்டது என்றால், "இதுவும் எம்பெருமான் ஏவல் எனப் போக்கொழிவார்’ என்று சேக்கிழார் சொல்லும்போது குலம்பற்றிய வருத்தம் மிகமிக ஆழத்தில் சென்று அவருடைய அகமனத்தையும் பற்றிவிட்டதைக் காண்கின்றோம். நாள்கள் செல்லச்செல்ல இவ்வெண்ணம் அவருடைய அக மனத்தைப் பற்றி அவரையும் அறியாமல் வெவ்வேறு விதமாகத் தொழிற்படும்படி இயக்கத்