பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 சேக்கிழார் தந்த செல்வம் செல்கின்ற போழ்துஅந்தத் திருஎல்லை பணிந்துஎழுந்து பல்கும் செந்வளர்த்த பயில்வேள்வி எழும்புகையும் மல்குபெருங் கிடைஒதும் மடங்கள்நெருங் கினவும்கண்டு அல்கும்தம் குலம்நினைந்தே அஞ்சிஅணைந்திலர் நின்றார். (பெ. பு-1068) இப்பாடலின் இறுதி அடி நந்தனாரின் மனம் வேறு வழியில் திசை திரும்பிவிட்டதை நமக்கு அறிவுறுத்துகிறது. எத்தனை நாள்கள் சிதம்பரத்தைப்பற்றி நினைந்து, எவ்வாறாயினும் அங்கே சென்று நடராஜப் பெருமானை வணங்க வேண்டுமென்று அல்லும் பகலும் அதே நினைவாகக் காலம் கழித்தார்! இன்று போவேன், நாளை எப்படியும் போவேன், நாளை இல்லாவிடினும் அதற்கு அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள் உறுதியாகப் போவேன்’ என்று விழிப்பிலும் உறக்கத்திலும் எல்லாம் ஒரே நினைவாக இருந்தார் பெரியார். ஆனால், இந்த நினைவு தோன்றும்பொழு தெல்லாம் இதற்கு எதிராகக் குலத்தை நினைந்து அங்கே செல்வது உறுகுலத்தோடு இசைவில்லை என்ற எண்ணம் தோன்றியது. இவ் விரண்டு மாறுபட்ட எண்ணங்களின் இடையே நிகழ்ந்த போராட்டத்தின் முடிவில் போகவேண்டும்