பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 சேக்கிழார் தந்த செல்வம் செல்லவேண்டு மென்ற, எண்ணம்-இருந்துவந்தது. இவை இரண்டின் இடையேயும் போராட்டம் மிகுந்தமையின் சாதிபற்றிய எண்ணம் வலுப்பெற வில்லை. அது வலுப்பெறவில்லை என்பதற்கு அவர் தில்லைக்குப் புறப்பட்டு வந்ததே சான்றாகும். சாதிபற்றிய எண்ணம் வலுவாக இருந்திருப்பின் தில்லைக்கு வந்தேயிருக்கமாட்டார் அல்லவா? ஆதனுரில் இருக்கின்றவரையில் வலுவிழந்திருந்த இவ் வெண்ணம், தில்லை வந்தவுடன் போராடுவதற்குரிய மற்றோர் எண்ணம் இன்மையினால் இப்பழைய எண்ணம் தானே வலுப்பெற்று நந்தனாரின் மனம் முழுவதையும் ஆட்கொண்டு, தலைவிரித்து ஆடத் தொடங்கிவிட்டது அதனைத்தான் சேக்கிழார் பெருமான். அல்கும் தம்குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர். என்று பேசுகிறார். இந்த மனோநிலையையும் ஒருவாறு கடந்து ஊருக்குள் நுழைந்த நந்தனார், மறுபடியும் கோயிற் புறம் செல்ல விரும்பாமல் தில்லையைச் சுற்றி வருகிறார். இப் பரிசாய் இருக்கஎனக்கு எய்தல்அரிது என்றுஅஞ்சி, அப் பதியின் மதில்புறத்தில ஆராத பெருங்காதல்