பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பகையார் 395 'எனக்கு உள்ளதே! இப்பொழுது இயற்பகை கொடுத்த விடையை பார்க்க வேண்டும். இது எனக்கு முன்பு உள்ளதே, வேண்டி எம்பிரான் செய்த பேறு. இவ்வாறு இயற்பகை கூறக்காரணம் என்ன? எம்பிரான் (எதிரே நிற்கும் அந்தணன்) எனக்குச் செய்த பேறு-எனக்குச் செய்த பேருபகாரம் என்று இயற்பகை மகிழ்ந்து கூறியது எதனை? எதிரே நிற்கும் அந்தணன் இவரிடம் ஒன்றை வேண்டிக் கேட்டானே தவிர, எந்த உபகாரமும் செய்யவில்லையே? அப்படி இருக்க, எம்பிரான் செய்த பேறு என்று இயற்பகை எதனைக் குறிக்கிறார்: சிவனடியார்கள் ஒன்றை கேட்டு விட்டால், அதனைக் கொடாமலோ கொடுக்க முடியாமலோ இருப்பது மாபெரும் பாதகம் என்று நினைக்கின்றவர்கள் இந்த அடியார்கள். குறித்து வேண்டியது' என்று எதிரே உள்ள அந்தணன் கூறிய பொழுது, தன்னிடம் இல்லாத ஒன்றை கேட்டு விடுவானோ என்ற ஐயம் இயற்பகை மனத்தில் இருந்திருக்கக் கூடும். அதனால்தான் அந்தணன் அவரிடம் இருக்கின்ற பொருளாகிய மனைவியை வேண்டி வந்தனென் என்று சொன்னவுடன் இயற்பகையார் மகிழ்ச்சி அடைகின்றார். மகிழ்ச்சிக்குக் காரணம், தன்னிடம் உள்ள பொருளை எதிரே உள்ள அந்தணர் கேட்டார் என்ற மகிழ்ச்சியே ஆகும். -