பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பகையார் 403 விட்டுச் செல்கின்ற ஒருவர் திரும்பிக்கூடப் பாராமல் செல்கின்றார் என்றால், (பார்க்கிலன் போனான்) அது மனித நிலைக்கு அப்பாற்பட்டு மிக மிக உயர்ந்து நிற்கும் நிலையாகும். இயற்பகை அந்த அதீத நிலையை எளிதாக அடைந்துவிட்டார் என்பதை அந்தணன் கூற்றாக, பார்க்கிலன் போனான்’ என்று பேச வைக்கிறார் சேக்கிழார். 'இயற்பகை முனிவர்" இதனை அடுத்தபடியாக, அந்தணன் திரும்பிச் சென்றுகொண்டிருக்கும் இயற்பகையைப் பார்த்து மீண்டு வருமாறு அழைக்கின்றான். என்ன சொல்லி அழைக்கின்றான்? இயற்பகை முனிவா ஒலம்! சில மணி நேரங்களுக்குமுன்வரை மனைவியுடன் வாழ்ந்த இயற்பகையை முனிவா! என்று அந்தணனே இறைவனே) அழைக்கின்றான் என்றால், இயற்பகையைப் பற்றி இக்கட்டுரையின் தொடக்கத்தில் நாம் சொல்லியது எத்துணை உண்மையானது என்பது விளங்கும். இயற்பகை என்ற புகார் நகர வணிகன் பெருஞ்செல்வனாக வாழ்ந்தான், வாணிகம் செய்தான், அழகிய மனைவியை மணந்தான் என்றாலும், அவன் வேண்டுதல் வேண்டாமை என்பவற்றைத் துறந்த மாமனிதன் என்பதை அறிதல் வேண்டும். ஆட்சிப் பொறுப்பை மேற்கொண்டு ஆண்டுவந்த சனகன்கூட ஞானி என்றும், கர்மயோகி என்றும்