பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி 423 தம்முடைய (ԼՔ(ԼՔ வசதியையும் அத்ற்காகப் பயன்படுத்துவதில்லை, ஆனால் இவர்களைப் பொறுத்தமட்டில் முழுவதையும் செய்தார்கள். அது எப்படி முடிந்தது என்பதை வேறுவிதமாகச் சொல்வார் சேக்கிழார். ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார் அந்த விருப்பு வெறுப்பு போய்விட்டது. பொருளைச் சேகரிக்க வேண்டும்; ஆள வேண்டும் என்பது எல்லாம் போய்விட்டது. போனது மட்டுமல்ல. அந்தப் பொருளுக்கு ஒரு மதிப்புத் தருகிற நிலையும் போய்விட்டது. தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் இடுப்பிலுள்ள கந்தை துணி தவிர வேறு எதுவும் இல்லாதவர்கள். அப்படியானால் அக்ப்பற்று ஆகிய அகங்காரம் புறப்பற்றாகிய மமகாரம் இவை எல்லாவற்றையும் ஒழித்து, அதன்வழி ஏற்படும் குற்றங்களையும் செற்ற காரணத்தினால், தூய்மையான மனம் உடையவர்களாக இருந்த காரணத்தினால்தான் அவர்கள் எந்தவிதமான பற்றும் இல்லாமல் இந்தக் குறிக்கோள் தொண்டு ஒன்றையே செய்தார்கள் என்பதை பெரியபுராணத்திலுள்ள எல்லா வரலாறுகளும் சுட்டிச் செல்லும், அதைப் புரிந்து கொள்வோமேயானால் இது ஒரு தனிப்பட்ட வாழ்க்கைமுறை-அதாவது ஏதோ ஒரு குறிக்கோளுக் காக எல்லாவற்றையும் தியாகம் செய்து வாழ்கின்ற வாழ்க்கை முறையைக் கடைப் பிடித்தவர்கள்-இந்தப்