பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 சேக்கிழார் தந்த செல்வம் மறுத்துவிடுகிறார். இந்தக் கைலாசநாதர் கோயில் கட்டிய இராஜசிம்மன் தான் பூசலார் வரலாற்றில் வருகின்ற காஞ்சி மன்னன் ஆவான். கச்சி கற்றழி எடுத்து இறைவனிடம் அசரீரி கேட்டவன் என்றெல்லாம் அவனுடைய கைலாசநாதர் கோயில் கல்வெட்டுகள் சொல்கின்றன. ஆதலால் இவன்தான் என்பது நன்றாகத் தெரிகிறது. அந்தச் சிறப்புகளை எல்லாம் தெரிந்திருந்தும் சுந்தரர் அவனுடைய கோயிலைப் பாடவில்லை என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். அந்தக் கோயில் இறைவனுக்காகச் செய்யப்பட்டது என்பதை விட அவனுடைய வெற்றிச் சிறப்புகளை காட்டுவதற்கு எடுத்துக் கட்டப்பட்டது என்கிற அடிப்படை இருப்பதனால்தான் சுந்தரர் அதனைப் போற்றாமல் விட்டுவிடுகிறார். அதை அப்படியே / சேக்கிழார் பெருமானும் பின்பற்றுகிறார். ஆகவே சேக்கிழார் சில செய்திகளைச் சொல்லாமல் விட்டார் என்றால் அதை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். உதாரணமாக இராஜராஜனைப்பற்றி இன்றைக்கு ஓஹோ என்று எல்லாரும் பேசுகிறார்கள். ஏதோ அவன் தமிழுக்கு மாபெரும் தொண்டு செய்தான் என்றும், திருமுறைகள் வருவதற்கு அவன்தான் பாடுபட்டான் என்றும் பைத்தியக்காரத்தனமாக கதைகள் பல வழங்குகின்றன. அவன் திருமுறை கண்டபுராணம் என்று பதினேழாம் நூற்றாண்டு அல்லது பதினாறாம் நூற்றாண்டு வாக்கில் யாரோ