பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி 429 இராஜராஜேச்வரம் உடையார் கோயிலைக் கட்டியவனான இராஜராஜனை எங்காவது ஓரிடத்திலாவது சொல்லியிருக்கலாமே? காடவர் கோமான் கச்சிக் கற்றளி எடுத்தான் என இராஜசிம்மனுடைய கைலாசநாதர் கோயிலை போகிறபோக்கில் குறிப்பிடுகின்ற சேக்கிழார், சோழர்களுக்குள்ளே மிகச் சிறந்தவனாகிய இராஜராஜன் இந்தத் தஞ்சை பெருவிடையார் கோயிலைக் கட்டியிருக்கிறான் என்று ஏன் சொல்லவில்லை. அதுமட்டுமல்ல. தேவாரப் பதிகங்களை யாரோ சிதம்பரத்தில் மூடி வைத்து இருந்தார்கள், இவன்தான் போய் அதை திறந்து எடுத்து வந்தான் என்ற திருமுறைகண்ட புராணத்து உளறலை சேக்கிழார் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனாலேதான் இதைப் பற்றிச் சொல்லவேயில்லை. அது உண்மை என்று நம்பியிருப்பாரேயானால் நூறு பாடல்களாவது பாடியிருப்பார் திருமுறைகள் வெளிவந்ததற்கு அதைப்பற்றிக் குறிப்பிடவே இல்லை என்றால் அவை அனைத்தும் கட்டுக்கதைகள் என்பது நன்கு தெளியப்படும். இன்று தமிழ்நாட்டு வரலாற்றை அதாவது சோழர்காலத்து வரலாற்றைப் பற்றிச் சிந்திக்கின்றவர்கள் இந்த சேக்கிழாரையும் ஒரு சான்றாக எடுத்துக் கொண்டு அவர் எப்படி எப்படி எல்லாம் செய்திருக்கிறார், எந்த அடிப்படையில் சோழர் வரலாற்றைப் பேசுகிறார் என்பதைத் தெரிந்துக் கொள்வோமேயானால் உண்மையான வரலாற்றை எழுதுவதற்கு அது பெரும் உதவியாக