பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சேக்கிழார் தந்த செல்வம் 6, 7, 8ஆம் நூற்றாண்டுகளில் வேதியர்கள் சமுதாயம் மிக உயர்ந்ததாகக் கருதப் பெற்றது என்பதில் ஐயமில்லை. பாணர்கள் என்பவர்கள் சங்ககால முதல் இருந்துவருகின்ற இனத்தார் என்றாலும் 7ஆம் நூற்றாண்டில் இந்தச் சமுதாயத்தினர் தீண்டத்தகாத வர்களாகக் கருதப் பெற்றனரோ என்று நினைக்க இடமுண்டு. ஐயர் என்ற சொல், உயர்ந்தவர்களைக் குறிக்கும் சொல்லாகப் பயன்பட்டதேனும் ஒர் இனத்தவரைக் குறிக்கும் இயல்பு б, 7ஆம் நூற்றாண்டுகளில் வந்துவிட்டது என்று நினைக்கவும் தோன்றுகிறது. பல்லவர்களின் தொடக்க காலத்தில் வடநாட்டிலிருந்து வேத ஒழுக்கம் g»_ðÜ) [ .{1.1 வைதிகர்கள் இங்கு நிரம்பக் குடியேற்றப்பட்டார்கள் என்பதைத் தண்டன் தோட்டச் செப்பேடுமூலம் அறியமுடிகிறது. . இங்குக் குடியேறியவர்கள் இங்கு உள்ளவர் களோடு இணையாமல் தனியே வாழ்ந்தனர் என்று கருத வேண்டியுள்ளது. திருஞானசம்பந்தர் திருவீழிநகர்ப் பதிகத்தில், செந்தமிழர், தெய்வமறை நாவர், செழு நற்கலை தெரிந்த அவரோடு அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர் கின்ற அரன் ஊர் வேதியர் விரும்புபதி விழிநகரே (EBUDD : 33384)