பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சேக்கிழார் தந்த செல்வம் தோன்றியது வேதியர் குலத்திலாம். மேட்டுக் குடியில் வேதியராகப் பிறந்த இவர், வேளாளராகிய திருநாவுக்கரசரைத் தம் குலகுருவாக ஏற்றுக் கொண்டதுடன், தம் வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும், தாம் செய்யும் அனைத்து அறங் களுக்கும் திருநாவுக்கரசர் பெயரையே வைத்தார். இவ்வளவும் அவர் செய்தது திருநாவுக்கரசரைப்பற்றிக் கேள்வி மாத்திரையாக அறிந்த நிலையில்தான் ஆகும். பிறகு அவரை நேரே கண்டபொழுது தம் குடும்பத்துடன் நாவரசருக்கு அடிமை ஆகிறார், அப்பூதியார். இந்நிகழ்ச்சி நடைபெற்றது. 6ஆம் நூற்றாண்டின் கடைப் பகுதியிலாம். அதாவது, திருஞானசம்பந்தர் தோன்றிச் சாதிப் புரட்சி செய்வதற்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஆகும் இது. இவை அனைத்தும் புராணக்கதைகள் அல்ல; வரலாற்று நிகழ்ச்சிகள் ஆகும். அப்பூதியார் அந்தணர் என்பதை அவருடைய குருவாகிய நாவரசரே 'அஞ்சிப்போய்க் கலி மெலிய அழல் ஒம்பும் அப்பூதி” என்று கூறுவதால் அறியலாம். இறைவனுக்கு எதிரே அவனால் படைக்கப்பட்ட மக்களுள் சாதி வேறுபாடு பாராட்டுவதை வன்மையாகக் கண்டிக்கும் முறையில் சேக்கிழார் இந்த நிகழ்ச்சி கட்கு அழுத்தம் தந்து பாடுவதால் சேக்கிழார் புரட்சிக்கவிஞர் ஆகிறார். . . . "