பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சேக்கிழார் தந்த செல்வம் இந்த வரலாறு சுந்தரர் திருத்தொண்டத்தொகையில் இடம் பெறாத ஒன்றாகும். திருவாரூர்க் கோவிலில் உள்ள ஒரு பழைய கல்வெட்டில் இக்கதைச் சுருக்கம் காணப்படுகிறது. ஆனால், சிலப்பதிகாரத்தில் வழக்குரை காதையில் "ஆவின் உகுநீர் நெஞ்சு சுட தான்த் தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும்ப்பெயர்ப் புகார் என்பதியே ஆகி" என்று கண்ணகி கூற்றாக வரும் தொடரில் இவ்வரலாறு புகார் நகரத்தில் நடந்ததாகப் பேசப்படுகிறது. அந்நாளில், அதாவது முற்காலச் சோழர் ஆட்சியில் புகார் நகரமே தலைநகராக இருந்துவந்தது. இடைக்காலச் சோழர் வரலாற்றில் உறையூர் தலைநகராக இருந்தது. பிற்காலச் சோழர் காலத்தில் தஞ்சை, பழையாறை முதலியவை ! தலைநகர்களாக இருந்தன. திருவாரூர் எப்பொழுது சோழர் தலைநகராக இருந்தது என்பதோ மனுநீதி அரசன் வரலாறோ இன்றுவரை வரலாற்று அடிப்படையில் அறியப்படவில்லை. ஆனால், இக்கதை சிலப்பதிகார காலத்திலேயே பழமையான கதையாக, செவிவழிச் செய்தியாக இருந்தது என்று நின்ைப்பதில் தவறில்லை. செவிவழிச் செய்தியாக இருந்த ஒரு பழங்கதையைத் திருவாரூரில் நடந்ததாகச் சொல்வது சரியா என்றால், அக்கோயில் கல்வெட்டுச் சேக்கிழாருக்குக் கைகொடுத்து உதவியுள்ளது. . -