பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 85 இடத்தருகே ஒரு குளம் சுருங்கி இருந்தது. அதனை விரிவாக்கக் குளத்தில் ஒரு கம்பையும் கரையில் ஒரு கம்பையும் நட்டு இடையில் கயிற்றைக் கட்டி அதனைப் பிடித்துக்கொண்டே சென்று குளத்தின் மண்ணை வெட்டிக் கூடையில் கொண்டு கொட்டிப் பெருக்கினர். சமணர்கள் மண்ணே எடுக்க வேண்டா என்று கூற, இது சிவத்தொண்டு - என்று மொழிந்தார். அவர்கள் இவரை உங்கள் இறைவன் வன்மை யுடையார் எனில், கண் பார்வையை ஏன் பெற்றுக்கொள்ளக் கூடாது என்றதோடு கயற்றை அறுத் து: எறிந்தனர். நாயனர் இறைவரிடம் முறையிட, இறைவர் இவரது கண் பார்வை துலங்கவும் சமணர் குருடராகவும் செய்தார். சமணர்கள் அவ்விடம் விட்டுச் சென்றனர். நாயனர் தம் தொண்டினேச் செவ்வனே புரிந்தனர். இது குறித்தே இவரை நாட்டமிகு தண்டி என்று சுந்தரர் சிறப்பித்தனர். மூர்க்க நாயனுர்: இவர் தொண்டை நாட்டில் திருவேற் காட்டில் வேளாளர் மரபில் தோன்றினர். இவர் அடியவர் கள் விரும்பும் பொருளை ஈந்தும், அவர்கட்கு அன்னம் இட்டுப் பின் உண்ணும் இயல்பும் பெற்றிருந்தார். இதல்ை பொருள் வளம் குறைந்தது. இந் நிலையிலும் இத் தொண்டைப் புரிந்து வந்தார். இந் நிலையில் சூதாடி ஆகிலும் தொண்டை நிறுத்தாது செய்ய அதில் ஈடுபட்டார். சூதாட்டத்தில் ஈடுபட்டபோது மூர்க்கமாக நடந்துகொண்ட காரணத்தால்தான் இவர் மூர்க்கர் எனப்பட்டார். சூதாட் டத்தில் வெற்றிகண்டு பொருள் கொண்டு முட்டாது தம் தொண்டைப் புரிந்து இறைவன் திருவடி உற்றனர். சோமாசி மாறர் இவர் சோழ நாட்டில் திருவம்பரி என்னும் ஊரில் வேதியர் மரபில் பிறந்தவர். இவர் யாகாதி காரியங்களைச் செய்து அடியார்கட்கு அன்னமிட்டு வந்தார். ஐந்தெழுத்தோதி வழி படுவார். அடியார் எவராயினும் அவர்களைச் சிவமெனக் கருதியவர். சுந்தர மூர்த்தி சுவாமி களிடம் பேரன்பு கொண்டவா. ஐம்புலன்களை அடக்கி இறைவன் திருவடி உற்றவர், (5)