பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 காப்புப் பருவம் சேக்கிழார் அனபாயனது ஆட்சியில் முதல் அமைச்சராக அமைந்தவர். இதனை உமாபதி சிவம் தாம் பாடிய சேக் கிழார் புராணத்துள், அத்தகைய புகழ்வேளாண் மரபில் சேக்கி ழார்குடியில் வந்த அருள் மொழித்தே வர்க்குத் தத்துபரி வளவனும்தன் செங்கோல் ஒச்சும் தலைமை அளித் தவர்தமக்குத் தனது பேரும் உத்தமச்சோ ழப்பல்ல வன்தான் என்னும் உயர்பட்டம் கொடுத்திட ஆங் கவர்நீர் நாட்டு நித்தன் உறை திருநாகேச் சுரத்தில் அன்பு நிறைதலினல் மறவாத நிலைமை மிக்கார் என்று சுட்டிக் காட்டியுள்ளார். இப்பாடலில் சோழ மன்னன், தன் ஆட்சியில் முதன்மை அளித்ததோடு இன்றி, அவர்க்கு உத்தமச் சோழ பல்லவர் என்ற பட்டமும் அளித்துச் சிறப்பித்துள்ளமையினையும் காண்க. முதல் அமைச்சர் அரசர்க்கு ஒப்பானவர். இதனைப் பரிமேலழகர் 'காவல் சாகாடு உகைத்தற்கண் அவ்வரசர்க்கு இணையாய அமைச்சன்’ என்று விளக்கியிருத்தலே அறியவும். இதல்ைதான் உமாபதி சிவம் 'தன் செங்கோல் ஒச்சும் தலைமை அளித்து' என்றனர். இங்ங்னம் முதல் அமைச்சராக அமைந்த சேக்கிழார், அமைச்சர் பண்புகள் அனைத்தையும் பெற்றிருந்தார் . திருவள்ளுவர் அமைச்சர்களின் இயல்புகளை அமைச்சு என்ற தலைப்பின் கீழ்ப் பத்துக் குறட்பாக்களால் விளக்கி யு ள்ளாா. அவற்றுள், 'தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்ல தமைச்சு என்றும்,

  • அறிகொன் றறியான் எனினும் உறுதி

உழைஇருந்தான் கூறல் கடன்' என்றும் கூறியுள்ளவற்றை நன்கு சிந்திக்கவும்.