பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 133 தூய நீறு பொன் மேனியில் விளங்கத் துார்த்த வேடமும் தோன்றவே தியராய் மாய வண்ணமே கொண்டுதம் தொண்டர் மருத வண்ணமும் காட்டுவான் வந்தார் என்று பாடுதல் காண்க. இதுவும் அவர் 'விமலர்' என்பதைக் காட்டுகிறது. இது நிற்க. 'பொய்யடிமை இல்லாத" செய்யுள், பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் பொழில்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க்கு அடியேன் மெய்யடியான் நரசிங்க முனை.அரையர்க் கடியேன் விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன் கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன் கழற்சத்தி விரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன் ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே என்பது. 'பொய்யடிமை இல்லாத செய்யுள்' என்று தொடங்கும் இப் பாட்டில் ஆசிரியர் திரு. பிள்ளே அவர்கள், நம்பி ஆண்டார் நம்பிகளின் பாடலாகிய தரணியில் பொய்ம்மை இலாத்தமிழ்ச் சங்கம் அதில்கபிலர் பரணர்நக் கீரர் முதல்நாற்பத் தொன்பது பல்புலவோர் அருள்நமக் கீயும் திருவால வாய்அரன் சேவடிக்கே பொருள்அமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்களே என்பதை மனத்தில் கொண்டு, பொய்யடிமை இல்லாத புலவர்கள் மதுரைக் கடைச்சங்கப் புலவர்களாகிய கபிலர் பரணர், நக்கீரர் முதலான நாற்பத்தொன்பதின்மர் புலவர் களைக் கருதியுள்ளனர்,