பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 42 காப்புப் பருவம் நரசிங் கமுனே அரையர்: இவர் திருமுனைப் பாடி நாட்டரசர். இவர்திருநீற்றிடத்தும், சிவனடியாரிடத்தும் கோயில் பூசையிலும் பற்றுடையவர். திருவாதிரையில் அடியார்க்கு அமுது படைத்துப் பொன் கொடுத்தவர், அவர்களுள் ஒருதுார்த்தர் (காமுகர்) இருந்தார். அவரைக் கண்டு ஏனைய அடியார்கள் ஒதுங்கினர். ஆனால், நாயனர் அவர் திருநீறு அணிந்து இருந்தமையின், தாம் அவரை வெருது அவரை வணங்கி அவர்க்கு இரட்டிப்பான பொன் கொடுத்து அனுப்பினர். இவர் சுந்தரரைத் தம் மகவாகக் கொண்டும் வ்ளர்த்தவர். அதிபத்தர்: இவர் நாகபட்டினத்தில் வலைஞர் குடியில் பிறந்தவர். தாம்பிடிக்கும் மீன்களில் ஒன்றைச் சிவபெரு மானுக்கு என்று கடலில் விடுவர். ஒருமீன் கிடைப்பினும் அதனையும் விட்டுவர, நாளும் நாளும் ஒரு மீனே பட்ட போதும் தொடர்ந்து விட்டு, வறுமையால் வருந்தியவர். ஒரு நாள் பொன்மீன் ஒன்றே கிடைத்தது. அதனையும் கடலில் விட்டுச் சிவபக்தியில் சிறந்து விளங்கியவர். கலிக்கம்ப நாயனு ர் : இவர் திருப் பெண்ணுகடத்தில் வணிகர் மரபில் பிறந்தவர். திருத்துரங்கானே மாடத்து இறைவரை வழிபடுபவர். சிவனடியார்கட்கு அமுது படைப் பவர். ஒருநாள் ஒர் அடியார்க்கு அமுது படைப்பதற்கு முன்பு அவரது திருவடியை அலம்பும்போது அவரது மனேவி யார் நீர்வார்க்கத் தயங்கினர். அதற்குக் காரணம் அவ் வடியார் முன்பு தம்வீட்டில் பணிபுரிந்த வேலே ஆள். நாயனர், தம் மனைவியார் மனக்கோள் உணர்ந்து அவ்வம் மையார் கையை வெட்டித் தாமே நீர் சொரிந்து விளக்கி அமுது படைத்துத் தம் தொண்டை நிலை நிறுத்தியவர். கலிய நாயனுர்: இவர் திருவொற்றியூர் செக்கர் குடி யினர். கோயிலுக்குத் திருவிளக்கு ஏற்றும் தொண்டு புரிந்தவர். தம் வறுமை நிலையிலும் கூலிக்கு எண்ணெய் வாங்கி விற்றும் திருவிளக்கு இட்டுவந்தார். கூவிக்கு