பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 16i அமையும் - பொருந்தும், மடல்-இதழ், வலத்தனை-வன்மை யுடையவனே, பெருவள்ளல் - சேக்கிழார், கடல் சூழ்ந்த யாப்பு என்பது திருத்தொண்டத் தொகையில் உள்ள ஒன்ப தாவது பாடலின் முதல் குறிப்பு, யாப்பு-பாடல், மன்னிநிலைத்து, மடம்-அறியாமை, ஆணவம், கருத்துள் நை-உள் ளத்துள் நெக்குருகுதல், அரில்-குற்றம், விடல்-நீங்கல், வயவெற்றி பொருந்திய, வேள் - வேளாளர்கட்குள்ளே, வேளாண்மை, ஐவர் கழற்சிங்கர், இடங்கழியார், செருத் துணையார் புகழ்த் துணையார், கோட்புலியார். விளக்கம்: சிவனடியார்கள் எதற்கும் மெலிந்தவர்கள் அல்லர். அவர்கள் வன்மை மிக்கவர்கள். இதனைப் பெரிய புராணத்தில் பல இடங்களில் காணலாம். இதற்கு எடுத்துக் காட்டாக ஒர் அடியாரைக் காண்போமாக. அவரே கூற்றுவ நாயனர். அவரது வன்மையினே, வென்றி வினையின் மீக்கூர வேந்தர் முனைகள் பலமுருக்கிச் சென்று தும்பைத் துறைமு டித்துஞ் செருவில் வாகைத் திறம்கெழுமி மன்றல் மாலை மிலேந்தவர்தம் வளநா டெல்லாம் கவர்ந்துமுடி ஒன்றும் ஒழிய அரசர்திரு எல்லாம் உடையர் ஆயினர் என்று பெரிய புராணம் கூறுதல் காண்க. இந்தக் காரணங்கொண்டே தொண்டர்களே, அடல் சூழ்ந்த தொண்டர்' என்றனர். நூல்கள் இரண்டு வகைப்படும் என்று தொல்காப்பியர் கூறுவர். அவை முதல் நூல், வழி நூல் என்பன. முதல் நூல், வழி நூல் இன்ன எனக் கூற வந்த தொல்காப்பியர் முறையே,

  • வினையில் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதல்நூல் ஆகும் என்றும், 11