பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 காப்புப் பருவம் தோற்றம் துடிஅதனில் தோயும் திதிஅமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் -ஊற்றமர் ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோ தம்முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு என்றும், மாயை தனஉதறி வல்வினையைச் சுட்டுமலம் சாய அமுக்கி அருள்தான் எடுத்து-நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல் தானெந்தை யார்பரதம் தான் என்றும் உண்மை விளக்கம் உரைத்தல் காண்க. சேக்கிழாரும், 'மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம் பலத்தே ஆதியும் நடுவும் இல்லா அற்புதத் தனிக் கூத்தாடும் நாதனர்' என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்தே ஈண்டு, 'நித்தராய் மன்றுள் நடம் நவில் வார்' என்றனர். இறைவர் திருநீற்றினேப் பெரிதும் விரும்புபவர் திருமுறைகள் 'செய்ய மேனி வெளிய பொடிப்பூசுவர் சுண்ணவெண்ணி துதைந்திவங்கு நூலுடையான். 'பவளம்போல் மேனியில் பால் வெண்ணிறு' 'கங்காளன் பூசும் கவசத் திருநீறு" என்று கூறுதலால், இறை வர் திருநீற்று விருப்பன் என்பது புலனுதல் காண்க. அதனுல்தான், உவக்கும் வெண்ணிற்ருெளி' என்றனர். நீறு ஒளிதருவது என்பதைச் சேக்கிழார் பல இடத்தும் பேசியுள்ளனர். மேனி மேல் நிரந்த நீற்ருெளி' என்றனர். பெரும் நீற்ருெளி நில ஒளி போன்றது என்பதை 'அண்ணல் வெண்ணிற்றின் பேர் ஒளி போன்றது நீள் நிலா என்றும் கூறினர். இதனை உட்கொண்டே ஈண்டு வெண்நீற்ருெளி நிலா ஒளி' என என்ப்பட்டது. இப்பாட்டின் பின் அடிகள் சேக்கிழார் பெருமான் நிரம்பத் திருநீறு அணிந்து, குவளே மலர் மாலை புனைந்து, உருத்திராக்கம் அணிந்து பொலிந்தார் என்பதை உணர்த்து கின்றன. இந்நிலையினே அணிகள் பல பொதுளத் திரு பிள்ளே அவர்கள் தம்கற்பனைகள் அழகுறப் பொருந்தப் பாடியுள்ள னர். குவளைமலர் மாலையைக் கண்ட வண்டுகள் அம்மலரின்