பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தப் பருவம் 431 போவாரை எல்லாம் விலகிப் போமாறு உணர்த்துவது போல மணி ஓசையுடன் சென்றது என்பான். 'மணித்தேர்' என்றும், அரசிளங்குமரன் அமர்ந்திருந்த தேர் நீண்ட தேராகவும், அதன்மேல் ஏறி இருந்ததனுல் கீழே நடப்பதைக் கவனிப்பதற்கு இயலாமல் போனது என்பான், 'நெடுந் தேர்மேல் ஏறி' என்றும், தேர்மீது சென்றபோது தக்க காப்பாளருடன் சென்றனன் என்பதை உணர்த்த, 'அளவில் தேர்த்தானை சூழ' என்றும், தேர் சென்ற வீதியும் , குறுகிய தெருவாக இன்றிப் பரந்த அரச வீதி என்பான். 'அரசுலாம் தெருவில் போங்கால்” என்றும், இளங் கன்று பயம் அறியாது ஆதலின், அது துள்ளி வந்து தானகவே அகப்பட்டுக்கொண்டது என்பான். 'இளைய ஆன்கன்று தேர்க்கால் இடைப்புகுந்து இறந்தது' என்றும், காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு ஆதலின், சோகத்தால் பசு இவ் வாறு மணியை அசைத்தது என்பான். “தளர்வுறும் இத் தாய் வந்து விளைத்தது இத்தன்மை' என்றும் கூறினன். இதனினும் பொருளாழம் உடைய செய்யுட்கு வேறு எந்தச் சான்றை எடுத்துக் காட்டுவது? . சுந்தரர் பரவையாரைக் கண்டபோது, கற்பகத்தின் பூங்கொம்போ காமன் தன் பெருவாழ்வோ பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ அற்புதமோ சிவனருளோ அறியேன்என் றதிசயத்தார் அதே சமயம் பரவையார் சுத்தரரைக் கண்டபோது, முன்னேவந் தெதிர்தோன்றும் முருகனே பெருகொளியால் தன்னேரில் மாரனே தார்மார்பின் விஞ்சையனே