பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/616

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 வாரானப் பருவம் கொண்டு எங்ங்னம் சேக்கிழார் கொண்டல் ஆயினர் என் பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர். கொண்டல், முதலில் வெண்ணிறமாக இருந்து பின் கடல் நீரைப் பருகிக் கருமேகமாக மாறி, ஆகாயவழிச் சென்று மின்னல் கொண்டு, இடி முழக்கம் செய்து மழை நீரைப் பொழியும். சேக்கிழாரும் வெண்மேகம் போல் திருநீற்றைப் பூசிக்கொண்டு, அன்பின் வழிச் சென்று பரசமயமாம் கோடை ஒழிய இறைவரது கருணைக்கடலை முகந்து, தம் புகழாம் மின்னல் எங்கும் ஒளிவிட்டு இலக, அன்பர்கள் இடி ஓசை போல் அ ர க ர என்னும் ஒசையினை எழுப்பத் தொண்டர் சரித்கிரமாம் மழையினைப் பொழிந் தனர் என்று கூறியுள்ள கருத்துக்களைக் காண்கையில் சேக் கிழாரைக் கொண்டல் எனக் கூறியிருப்பது பொருத்தம் ஆகின்றதன்ருே? இவ்வாறு கொண்டல் எனக் கூறிச் சீரிய சான்ருேர் அதற்கேற்பச் செய்யுளே அமைத்துப் பாடுவர் என்பதை, முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள் என னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல் பொன்னம் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய் என்று திருவாதவூரரும். ஆழி மழைக்கண்ணு ஒன்றுநீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப் பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்