பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/685

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பருவம் C03 சேக்கிழார் சந்திரனேக் கீழ்மகன் அற்பன் எனக் கவிபாடின் அவனே யாரும் விரும்பார் என்றனர் பிள்ளை அவர்கள். சந்திரன் தட்சல்ை சாபம் ஏற்று உடல் குறைவுற்று அதனை ஒழிக்கப் பிரமவிஷ்னுக்களைக் சரண் புகுந்தபோது, அவனே ஏற்காது ஒதுக்கிவிட, அந்நிலையில் தளர்ந்த சந்திரன் சிவபெருமானைச் சரண்புக, அவனுக்கு அடைக்கலம் தந்து அவனே ஆதரித்தனன். அத்தகையவன் கூடத் தன் அன்பரால் இழித்துக் கூறப்பட்டானுயின், அவனே ஏற்கமாட்டான் என்ற குறிப்பில், 'முக்கட் புராதனனும் உனை வெறுப்பன்' என்றனர். இறைவனுக்கு இன்னன் இனியன் என்பது இல்லை. இது குறுத்தே, "வேண்டுதல் வேண்டாமை இலான்' என்று இவனது பெருமை தெரிந்து வள்ளுவர் விதந்து கூறினர். இதனை மணிமொழியார் விளக்குவார்போன்று, பூசுவதும் வெண்ணிறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலும் கானேடி பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை ஈசன்,அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானன் சாழலோ என்று இறைவனது வெறுப்பின்மையினை விளக்கினர். இங்ங்னம் விஷமுடைய பாம்பையும் ஏற்கும் பரமனும், 'உன்னைச் சேக்கிழார் வெறுக்கும் காரணத்தால் வெறுப் பான்,' என்பார், 'முக்கட்புராதனனும் உனே வெறுப்பன்' என்று கூறினர்' என்று கூறினும் அமையும். இறைவன் ஒருவனே புராதனன் ஏனைய யாவரும் புதியர்கள். இதனை மணிமொழியார், 'பரமன் காண்க பழையோன் காண்க’ என்றும், 'முன்னேப் பழம்பொருட்கும் முன்னேப் பழம் பொருளே’ என்றும் கூறியுள்ளார். அப்பர் பெருமாளுரும், 'மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்” என்றும், "முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி' என்றும் அறிந்து கூறியதைக் காண்க. மேயினேன் மேயினேன்' என்றது அடுக்குத் தொடர். இவ்வாறு அடுக்கிவரும் உண்மையினைத் தொல்காப்பியர்,