பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/751

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுபறைப் பருவம் 669 "பொன்மன்றம் பொற்ரு மரைஒக்கும் அம்மன்றில் செம்மல் திருமேனி தேன்.ஒக்கும் அத்தேனே உண்டு களிக்கும் களிவண்டை ஒக்குமே எம்பெரு மாட்டி விழி' என்று குமரகுருபரரும் கூறியதைக் காண்க. இங்கனம் இறைவி ஏன் இறைவன் திருநடனத்தினைத் தன் கண்கொண்டு காண்கின்றனள் என்பதற்குரிய காரணத் தைக் குமரகுருபரர், " மன்னுயிர்த் தொகுதிக்கு இன்அருள் கிடைப்ப வையம்சன் றளித்த தெய்வக் கற்பின் அருள்சூல் கொண்ட ஐயரித் தடங்கண் உருமான சாயல் திருந்திழை காணச் சிற்சபை பொலியத் திருநடம் புரியும்' என்று சிதம்பர மும்மணிக் கோவையில் கூறுதல் காண்க, தில்லை அம்பலம் பற்பல அரசர் காலத்தில் பொன்னல் அமைக்கப்பட்டது என்பது வரலாற்று உண்மை ஆகும். ஆதித்த சோழன் மகன் பராந்தகன் திருச்சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தவன். விக்ரமசோழன் மகன் இரண்டாம் குலோத்துங்கன் பேரம்பலம் பொன் வேய்ந்தான். தில்லைச் சிற்றம்பலத்தின் முகட்டைப் பொன் வேய்ந்தவனும் விஜயா லயன் ஆதித்தன். விக்ரமசோழன், தில்லைச் சிற்றம்பலம் சூழ்ந்த சுற்றுமாளிகை, கோபுரம், வாயில் இவற்றைப் பொன் வேய்ந்தான். இவ்வாறு பொன் வேய்ந்து சிவபெரு மானிடத்தில் இடையரு அன்பு சோழப் பேரரசர்களிடம் @(5$ggolo zsír@gfrsör, Vincent Smith argir uaitř, “The Chola kings apparently with out exception were votaries of the God Siva' GT görgy Lj5g£ 5S, GTG9Slupgiremrearff. ஆகவே, அம்பலம் பாங்கு புனே செம்பொன் அம்பலம் ஆயிற்று. இறைவன் ஒருவனே பரஞ்சோதி என்பதைத் தாயு மானவர், 'சுத்த நிற்குணமான பர தெய்வமே பரஞ் சோதியே சுகவாரியே” என்றனர். ஆகவே, ஈண்டும் பரஞ்