பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/783

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுபறைப் பருவம் T01. மேவும் வேலையில் உறுபெருஞ் சுற்றமும் அலறிப் பாவை மேல்லிழுந் தனர்படர் ஒலிகடல்போல் என்று ஆவி நீங்கியதையும், ஆன தன்மையின் அத்திருப் பாட்டினின் றடைவே போன வாயுவும் வடிவமும் பொலிவொடு நிரம்பி என்று ஆவி வந்துற்றதையும் சேக்கிழார் பாடிக் காட்டி இருத்தலின், ஆன்மா உண்டு என்றதை நிலை நாட்டிய வாறு காண்க. இருவினையுண்டு என்பதையும் பெரிய புராணத்தில் காண்கிருேம். அப்பர், இறை புண்ணியம் இல்லாத காரணத்தால்தான் சமணர் சமயம் புகுந்தார் என்பதை, நில்லாத உலகியல்பு கண்டுநிலை யாவாழ்க்கை அல்லேன் என் றறத்துறந்து சமயங்கள் ஆன வற்றின் நல்லாறு தெரிந்துணர நம்பர் அரு ளாமையில்ை கொல்லாமை மறைந்துறையும் சமண்சமயம் குறுகுவார் என்றனர். நம்பர் அருளாமை என்ற குறிப்பினுல் நல்வினை அதுபோது அப்பருக்கு இல்லை என்பதை உணர்க. நல்வினையாம் புண்ணியம் ஒன்று உண்டு என்பதைக் கண்ணப்ப நாயனர் புராணத்துள் புண்ணியப் பொருளாய் உள்ள பொருவில்சீர் உருவி னனைக் கண்ணினுக் கணியாத் தங்கள் கலன் பல அணிந்தார் அன்றே என்று சுட்டியுள்ளதையும் காண்க. இங்ங்ணம் பதி உண்மை, பசு உண்மை, வினை உண்மை உண்டு என்று கருத்துடைய கலிகளைப் பாடிய பாடல்களைப் படித்துப் பயன் உறுக.