பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/835

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுதேர்ப் பருவம் 753 என்பர். இது மழைத்துளியை உண்டு பாடவல்ல தாம். 'துளி நசைவேட்கையான் மிசை பாடும்புள்' என்று கலியி னுள்ளும், 'துளி நசைப்புள்' என்று புறநானுாற்றுள்ளும், 'தன்பாடிய தளி உணவின்புள்' என்று பட்டினப்பாலே யுள்ளும் வருதல் காண்க. சீவகசிந்தாமணியில் 'வானம்பாடி மேகத்துப் பிறந்த துளியையே நச்சிப் பாடுமாறு போல’ என்று உரை எழுதியுள்ளார் நச்சிஞர்க்கினியர். தட்சயாக பரணியில் "வானம்பாடியே கூடிமடுப்பவே' என்று வரும் தொடரில் வரும் வானம்பாடி என்பதற்குச் சாதகப் புள் என்று உரைகூறியதைக் காணவும். சகோரப் பறவை, நிலவு ஒளியினே உண்ணும் தன்மை யது. இதனே முத்துக் குமாரசாமிப் பிள்ளேத் தமிழில், சகோரப் பறவை, புன்னகையை நிலவொளி எனக் கருதி அருந்த விழைந்தது' என்பதை, 'அரும்பு நகையைச் சகோரப் புள் அருந்த' என்றும், 'நிலவொடு இளவெயிலும் அளவளாய் உண்ணச் சகோரம் வெஃகும்' என்றும் கூறுதலே அறியவும். சூரியனைத் தாமரையின் கணவன் எனக் கூறுதல் மரபு. இதற்குக் காரணம் அவனது வருகையினைக் கண்டதும், தாமரை மலர்வதால் என்க. "செங்கமல முகமலரச் செய்ய வெய்யோன் உதயம் செய்தான்' எனக் கம்பராமாயணத்தில் வருதல் காண்க. சந்திரனைக் குமுத மலரின் கனவன் என்ப தால் சூரியன் தாமரை நாயகன் எளப்படுகிருன் இதனைக் கந்தபுராணம், திங்கள் தன்குறை உணர்த்தவாய் திறந்தெனச் செய்ய பங்க யங்கள்போ தவிழ்ந்தன குமுதங்கள் பலவும் தங்கள் நாயகா உடைந்தது நோக்கியே கபனற் கங்கை கூப்பிய திறனென ஒடுங்கிய அன்றே என்று கூறுதல் காண்க. சூரியன் வரும் தேர் ஏழு குதிரைகள் பூட்டப்பட்டது என்ப்து கவிமரபாதலின் 'ஏழுதாம் பரித்தேர்” என்றனர். 48