பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/865

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. சுவை அமையும் மோதகம் கணிபலவும் மற்றவும் தும்பிமுக வற்கு நல்கித் தொழஅமுது செய்தலால் ஊறென்ப திந்தநகர் சூழ்நகரினும்பு காது நவையதடை யாதென்னின் அச்சுமுதல் வலியவே நவிலவேண் டுவதி னிஎவன் நன்னுதல் திருநீறு நிலவெறிக் கக்குழை நலம்கொண்மணி வெயில் றிக்க அவை அகம் வியக்கும்.முப் புலவர் அருள் முக்கனி அருந்தமிழ்ச் சுவை,அ னைத்தும் ஆராய்ந் தெடுத்துப்பல் செய்யுள்முக மா அறிய அறிவித்த பெருநா வலன் சிவை உதவு சொல்கொண்ட சேவையர் குலாதிபன் சிறுதேர் உருட்டி யருளே சிறுகோல்:எடுத்தரசு செங்கோல் நிறுத்தினுேன் சிறுதேர் உருட்டி.யருளே. (அ. சொ.) மே த கம்-கொழுக்கட்டை, தும்பி முகவன்-யான முகம்கொண்ட விநாயகர், நல்கி-தந்து, 2ళిg|துன்பம், நவை-குற்றம், அச்சு-உருள்கோத்தமரம் துதல்நெற்றி, நிலவு-ஒளி, எறிக்க-வீச, அவையகம்-கற்ருேர் கழகம், முப்புலவர்-அப்பர், சுந்தரர், சம்பந்தர், முக்கனிமா, பலா, வாழை, என்னும் மூன்று பழங்கள், செய்யுள் முகமா-பாடல் வழியாக, சிவை-பராசத்தி, சூழ்நகர்புறநகர், எவன்.என்னே என்னும் பொருள் தரும் விஞ. இடைச்சொல், சொல்-நெல். விளக்கம்: மோதகம் கொழுக்கட்டை. இதில் இனிப் புடைய பூரணம் உள் வைத்துச் செய்யப்படுதலின், சுவை அமையும் மோதகம் என்றனர். மோதகம் விநாயகப் பெருமானுக்கு உரிய உகந்த பொருள்களுள் ஒன்று. விநாயகப் பெருமான் உகக்கும் பொருள்கள் இன்ன என்பதை