பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/882

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

800 சிறுதேர்ப் பருவம் எட்டிநல்திகிரி பறித்தெறிந் துரல்கால் லியானையை உருட்டிவாம் குதி ரை எறிந்துசங் கதிர்த்துக் கொடுமரம் முறித்திட் டெதிர்ந்திடார் தமைவிடுத் தோடிக் கிட்டினர்ப் புரட்டி முருகவேள் பூதக் கிளேப்பெரு வெள்ளம்ஒத்து எழுந்து கிளர்மணி முத்த நதியுடை விருத்த கிரியமர் பெரிய நாயகியே என்று அறிவித்திருப்பதைக் காண்க. இறைவன் திருமொழி வேதம் என்பதை எவருர் ஒவ்வுவர். அரன் போல் 'மையல்இல் செய்யுள் செய்தமை யால்’’ என்று குறிப்பிட்டிருப்பதல்ை திருஞான் சம்பந்தர் வாக்கு வேதம் என்பதை உணர்த்தியவாறு காண்க. வடமொழியாளர் தமிழரைத் திராவிடர் என்றும் தமிழ் மொழியைத் திராவிடம் என்றும் தங்களுக்குள் வழங்குவாராயினர். சங்கராச்சாரியரும் செளந்தரியலகரியில் திராவிட சிசு என்று திருஞான சம்பந்தரைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர். ஆகவே திரு. பிள்ளே அவர்களும் தமிழைத் திரவிடம் என்றனர். ஆலயப் பணியோ ஏனேய திருத் தொண்டோ செய்தற்கு முதலில் வேண்டப்படுவது விருப்பம் ஆதலின், ஆலயப்பணி முதல் புரிவிருப்பம் மிக்கார்கள் என்றனர். இது கருதியே ஒளவயைாரும், அறம் செயவிரும்பு என்றனர். இப்பாடல் சைவசமயத்தவர் யாவரும் வாழ வாழ்த்துக் கூறும் முறையில் அமைந்துளது. திரு. பிள்ளை அவர்கள் வணக்கத்தில் தொடங்கி வாழ்த்தில் முடித்துள்ள திறனே என்னென்று பாராட்டுவது! வாழ்க அவர் தம் திருப்பெயர்! வாழ்க அவர் தம் நூல்கள்! செந்தமிழ்ச் செல்வர் சைவசமய சிரோன்மணி பேராசிரியர் வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார் எழுதிய சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பெருவிளக்க உரை முற்றிற்று.