பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம் 5 என்று தாமே எடுத்து மொழிதல் காண்க. இறைவன் திரு வாய் மலர்ந்ததனால் 'உலகெலாம்' எனும் தொடர் மறை ஆயிற்று. இறைவர் உயிர்களுக்கருளும் இயல்பு அனந்தம். அவர் அவர்களின் தகுதிக்கேற்ப அருள்பவர். இதனைத்தான் திருஞான சம்பந்தர் 'ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணம் ஆதிமாண்பும் கேட்பான்புகில் அளவிலை” என்று அருளிப் போந்தார். ஆசிரியர் திரு பிள்ளை அவர்கள் 'வினை உருபு தொக' என்னும் தொடரில் அரிய பொருள் நுட்பத்தினைப் புலப் படுத்தி யுள்ளனர். அதாவது, - உலாகெ லாம்.உணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம் என்னும் திருத்தொண்டர் புராணப் பாடலின் ஈற்றடியில் உள்ள 'மலர்சி லம்படி” என்னும் சீர்களுக்கு உண்மைப் பொருள் இதுதான்; வேறன்று, என்னும் அரிய குறிப்பை உணர வைத்துள்ளார். மலர் சிலம்படி என்பதன் பொருள், உலகெலாம் மலரும், மலர்கின்ற மலர்ந்த சிலம் பணிந்த திருவடி என்பதாம். அவ்வாறின்றி 'மலர் போன்ற சிலம்பினே அணிந்த திருவடி’ என்று உவமத்தொகையாகப் பொருள் கூறுதல் தவருகும். இப்பொருள் தருவதாயின் 'மலர்ச் சிலம்படி” என்று சகர ஒற்று மிகுந்திருக்கும். ஆனால், மலர் சிலம்படி என ஒற்று மிகாது, வினைத் தொகை இலக் கணப்படி இத் தொடர் அமைந்துள்ளது. இவற்றைச் சீரிய முறையில் 'வினை உருபு தொக” என்று பாடியருளினர். வினே என்றது ஈண்டு வினைத் தொகையைக் குறிக்கும். உருபு தொகுதலாவது இடையே முக்காலம் மறைந்திருத்தல் ஆகும். வினைத் தொகை இலக்கணம் கூற வந்த தொல் காப்பியர், 'வினையின் தொகுதி காலத் தியலும்” என்ருர். இதற்கு விளக்கம் தந்த நச்சினர்க் கினியர், 'வினைச் சொல்லினது ஈருய்த் தொக்கு நிற்கும் எழுத்துக்கள், காலத்