பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பாயிரம் டாகவும், விநாயகர் கையில் கொண்ட கோடுடன் தானும் விளங்கியபோது, கைக் கோடு இரண்டாகவும், விநாயகர் மார்பில் முத்தாரம் போன்றும், வயிற்றில் கட்டப் பட்ட உதரபந்தமாகவும், அரைக்கு ஆடையாகவும், விநாயகர் அணிந்த வார்க்கழலில் பதித்த முத்தாகவும் திகழ விளங் கின்ை என்பது. ஈண்டு விநாயகர் சர்வவியாபியாக இருப் பவர் என்ற குறிப்பை உணர்த்தியவாறு. விநாயகர் தமது கொம்பையே ஒடித்துக் கயமுகாசூரனைக் கொன்ற காரணத் தால் அக் கொம்பு அவர் கையதாயிற்று. அக் கொம்பே வேதவியாசர் கூறிய பாரதத்தை எழுத எழுத்தாணியும் ஆயிற்று. இதனை வில்லிபுத்துாராரும், நீடாழி உலகத்து மறைநாலோ டைந்தென்று நிலை நிற்கவே வாடாத தவவாய்மை முனிராசன் மாபார தம்சொன்ன நாள் ஏடாக வடமேரு வெற்பாக அம்கூர் எழுத்தானிதன் கோடாக எழுதும்பி ரானைப்ப னிந்தன்பு கூர்வாமரோ. என்று பாடி விநாயகரைப் பரவியுள்ளார். வாய்க் கோடும் கைக் கோடும் பிறைச் சந்திரனைப் போன்றவை என்பதை 'இந்து இளம் பிறை போலும் எயிற்றனை' எனத் திருமந் திரத்தில் காணப்படுதலும் காண்க. கணபதியின் நெற்றியில் சந்திரன் இருப்பதைக் காசி துண்டிவிநாயகர் உருவில் நன்கு காணலாம். விநாயகப் பெருமானை வணங்க வேண்டும். வணங்குவ தால் பலன் உண்டு என்பது நமது நாட்டுப் பழம்பாடல் களால் அறிகிருேம். திருவாக்கும் செய்கருமம் கைகூடும் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும்-உருவாக்கும் ஆதலால் வானேரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை. எனப் பதினேரும் திரு முறைப் படலாலும்,