பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பாயிரம் குருவணக்கமும் அவை அடக்கமும் ஓங்குகயி லாயபரம் பரைநந்தி அடிகட் குறுமரபெட் டாவது பின் தோன்றலாய் எங்கள் உயர்திருவா வடுதுறைச்சுப் பிரமணிய குரவற் குற்றபத்தொன்பதாவதுமுன் தோன்றலாய்ப் பொலிந்து தேங்குசிவப் பிரகாச முதலியவாய் மலர்ந்து திகழ்உமா பதிசிவனே குன்றை உற மேவித் திருந்தும்ஏர் வளம்கொண்டு பெருமையின்மேல் ஆகிச் சிறத்தலால் செம்மேனிக் குமரவேள் ஒத்தும் பாங்குபெறத் துதிக் கையொடொர் கோட்டத்தன் ஆய பயிற்சியின் அக் குமரவேள் திருத்தமையன் ஒத்தும் பரவுசேக் கிழான் எனும்பேர் பரித்தலின் அக் கணேசப் பண்ணவனை இனிதுயிர்த்த திருத்தாதை ஒத்தும் வீங்குபுகழ் படைத்த அருள் மொழித்தேவன் புராணம் விரித்துரைத்தான் அவனடிதாழ்த்தென் அறிவிற்கேற்ப மேயபிள்ளைத் தமிழ்எனஒன்றுரைப்பல்அஃ தறிவால் மிக்கவர்தம் குழாத்தினுக்கு மிக்கநகை தருமே (அ-கு) மரபு-பரம்பரை, உ று - .ெ ப ா ரு ந் தி ய அடிகட்கு உறு, குரவற்கு-ஆசிரியர்க்கு, பொலிந்து-சிறந்து, வாய்மலர்ந்து-சொல்லி, திகழ்-விளங்கும், குன்றை-குன்றத் தூர், இது குன்றை என மருஉ இலக்கணப்படி வந்தது' உற-பொருந்த, ஏர்-கலப்பை, ஏர் அழகும் ஆகும், பாங்குஅழகு, துதிக்கை-வணங்கும் கை. கோட்டம்-புலியூர்க் கோட்டம், திரு-சிறந்த, தமையன்-அண்ணளுகிய விநாயகன், பரவும்-போற்றும், பரித்தலில்-தாங்குதலால், பண்ணவன்தேவன், உயிர்த்த - பெற்ற, திருத்தாதை - சிறந்ததந்தை யான சிவபெருமானை, வீங்கு-மிக்க, அருள் மொழித் தேவன்அருள் மொழித் தேவன் எனும் சேக்கிழார், குழாம்-கூட்டம். (விளக்கம்) : ஏனைய பிள்ளைத் தமிழ் நூல்களில் குரு வணக்கமும் அவை அடக்கமும் காணுதல் அரிது. ஆனால்,