பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 சேக்கிழார்

என்றும், நடனமாதர் "மாணிக்கத்தார்’ என்றும் பெயர் பெற்றிருந்தனர்.பல கோவில்கள் ஊர் அவையார் ஆட்சியில் இருந்தன. 3. .

மக்களுக்கு வழங்கிய நாயன்மார் பெயர்கள். நாயன்மார் பெயர்கள் அக்கால இயற்பெயர்களாகவும், காரணப் பெயர்களாகவும் காண்கின்றன. அப்பெயர்கள். அக்கால மக்கள் வழக்கில் இருந்தனவாதல் வேண்டும் அல்லவா? அம்மக்கள் நாயன்மார் நினைவுக்கு அறிகுறியாக அப்பெயர்களை வைத்துக்கொண்டனரா, அல்லது அக்கால வழக்கப்படி அப்பெயர்கள் இடப்பட்டனவா என்பது திட்டமாகத் தெரியவில்லை. பல்லவர் காலத்துக் கல்வெட்டுகள் நிரம்பக் கிடைக்கவில்லை; கிடைத்துள்ளவை மிகச் சிலவே. அவற்றிற் காணப்படும் சில பெயர்கள் நாயன்மார் பெயர்களுடன், ஓரளவு ஒப்புமை உடையனவாகக் காண்கின்றன. , அவற்றைக் கால முறைப்படி காண்க: (பக்கம் - 49)

முடிவுரை. இதுகாறும் கூறிப்போந்த விவரங்களால் பல்லவர் காலத்தில் -

1. பாடல்பெற்ற கோவில்கள் படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்தன.

2. கோவில்களை அடுத்துப் பல பகுதிகளில் மடங்கள் தோன்றிச் சமயக் கல்வியைப் புகட்டி வந்தன.

3. கோவில்களில் திருப்பதிகங்கள் ஓரளவு ஓதப்பெற்று வந்தன.

4. நாயன்மார் வாழ்ந்த பதிகளில் இருந்த கோவில்களில் அவர்தம் உருவச்சிலை எழுந்தருளப்பெற்று வழிபாடு நடைபெற்று வந்தது. ஆரூர்க் கோவில் போன்ற பெரிய கோவில்களில் நாயன்மார் பலருடைய உருவச் சிலைகள் எடுப்பிக்கப்பெற்றன.