பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேக்கிழார்

1. தொண்டை நாடு - குன்றத்தூர்

தமிழகம் என்பது வேங்கடம் முதல் குமரிவரையுள்ள நிலப்பகுதியாகும். அது சேர, சோழ, பாண்டிய நாடுகளையும் நடு நாட்டையும் தொண்டை நாட்டையும் தன் அகத்தே கொண்டது.

சேர நாடு என்பது திருவாங்கூர், கொச்சி, சமஸ்தானங்களும் மலையாள மாவட்டமும் சேர்ந்த நிலப்பரப்பாகும். இதன் தலைநகரம் வஞ்சி மாநகரம் என்பது. முசிறி, தொண்டி என்பன சிறந்த துறைமுகப் பட்டினங்கள். இந்நாட்டை ‘வானவர்’ எனப்பட்ட சேரர் பல நூற்றாண்டுகளாக ஆண்டு வந்தனர்.

சோழ நாடு என்பது தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களும் கிழக்கடற்கரை வெளியும் சேர்ந்துள்ள பரப்பாகும். இந்நாட்டைச் சோழர் என்பவர்கள் நெடுங் காலமாக ஆண்டு வந்தனர். இவர் தலைநகரங்கள் உறையூர், காவிரிப்பூம்பட்டினம் என்பன. காவிரிப் பூம்பட்டினம் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது.

பாண்டிய நாடு என்பது மதுரை. இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களும் கிழக்கோடிக்கரை சேர்ந்த நிலப்பரப்பாகும். இதன் தலைநகரம் ஆலவாய் எனப்பட்ட மதுரை. காயல், கொற்கை, தொண்டி என்பன இதன்