இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முன்னிரவு. கிழக்கு வானம் இருண்டு இருந்ததைக் கண்டு சிறு குழந்தைகள் பயந்து விடக் கூடாது என்பதற்காக அங்கும் இங்குமாக சில நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. இ ரா ம ந ா த பு ர ம் கோட்டைக்குத் தெற்கே கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு தென்னந். தோப்பில் மையப் பகுதியில் இருந்த காவலரது குடிசையிலிருந்த சிறிய விளக்கு